×

மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

புதுடெல்லி: மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்வதால் பயணிகள் ரயிலை ரத்து செய்து இந்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக  ரயில்வே வாரிய பயணிகள் மார்க்கெட்டிங் இயக்குனர், அனைத்து ரயில்வே மண்டல முதன்மை தலைமை வர்த்தக மேலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை நேற்று எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மெயில், எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில் மற்றும் புறநகர் பயணிகள் ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில்களில் பயணம் செய்ய வரும் ஜூன் 30ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் டிக்கெட் ரத்து செய்யப்படும். இவ்வாறு ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு கொரோனா ரீபண்ட் விதிப்படி முழு கட்டணத் தொகையும் பயணிகளுக்கு திரும்ப வழங்கப்படும். மேலும் 12ம் தேதி முதல் இயக்கப்படும் சார்மிக் மற்றும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Express ,Mail , Mail and Express trains, canceled
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...