×

கொரோனா ஊரடங்கு தவிக்கும் அப்பளத் தொழிலாளர்கள்: நிவாரணம் வழங்க கோரிக்கை

காஞ்சிபுரம்: கொரோனா வைரஸ் ஊரடங்கால்,சீசன் நேரமான இப்போது தொழில் செய்ய முடியாமல் அப்பளத் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அப்பளம் தயாரிக்கும் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
பெரும்பாலும் பெண்கள் அதிகம் உடல் உழைப்பு தேவைப்படாத வயதானவர்கள் அப்பளத் தயாரிப்பு வேலை செய்கின்றனர். காஞ்சிபுரத்தில் சிறுகாவேரிப்பாக்கம், ஒலிமுகமதுபேட்டை, பஞ்சுப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் அப்பள தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.  

பெரிய அப்பளத் தயாரிப்பு நிறுவனங்கள், அவுட்சோர்சிங் முறையில் ஏஜண்டுகள் மூலமாக அப்பளத் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். ஏஜண்டுகள் பெரிய நிறுவனங்களிடம் உளுந்து மாவைப் பெற்று, தொழிலாளர்களைப் பயன்படுத்தி அப்பளம் தயாரித்து, அந்நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர்.  இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பால் அப்பளத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து, உணவுக்கே வழியின்றி தவித்து வருகிறார்கள். அப்பளத் தொழிலாளர்களில் சுமார் 90 சதவீதத் தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Corona Curfew Area , Corona, curfew, area workers, relief
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...