×

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், புதிதாக கட்டப்பட்டுள்ள, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல கட்டடத்தில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில், 18 கோடி மதிப்பில், ஆறு அடுக்கு, அதிநவீன கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டடத்தில், ஐந்து அறுவை சிகிச்சை அரங்குகள்,  பிரசவ வார்டுகள், அறுவை சிகிச்சைக்கு பின், தாய், சேய் படுக்கை வசதி கொண்ட வார்டு ஆகியவை அமைகிறது. இங்கு, 100 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், மேற்கண்ட அரசு மருத்துவமனைகளில், கொரோனா தொற்று சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போதிய இடவசதியில்லை. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக, தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக, கட்டப்பட்டு உள்ள குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை திறக்கப்படாத நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு, 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  


Tags : Coroner ,building ,government hospital ,Tiruvallur , Tiruvallur Government Hospital, Corona
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு