×

கொரோனாவுக்கு எதிராக போராடும் நர்ஸ்களுக்கு மோகன்லால் சர்ப்ரைஸ்

உலக செவிலியர் தினம் நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. அப்போது கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை அளித்து வரும் நர்ஸ்களுக்கு போன் ெசய்து பாராட்டியுள்ளார் நடிகர் மோகன்லால். செவிலியர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த முறை, கொரோனா தாக்கத்தால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டில் செவிலியர் தினத்தன்று பலரும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் செவிலியர்களை நினைவு கூர்ந்து அவர்களை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மோகன்லால், கேரளாவை சேர்ந்த நர்ஸ்கள் சில பேருக்கு திடீரென செல்போனில் அழைத்தார்.

குறிப்பிட்ட எண் இல்லாமல் அன்நௌன் நம்பராக வந்ததும் யாரோ என நினைத்து நர்ஸ்கள் பேச, மறுமுனையில் மோகன்லால் பேசியதை கேட்டு அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ‘இந்த கொரோனா பாதிப்பு சமயத்தில், உங்கள் குடும்பத்தை மறந்து நீங்கள் செய்து வரும் இந்த சேவை மகத்தானது. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்’ என மோகன்லால் போனில் தெரிவித்தார். பின், நர்ஸ்களிடம் நலம் விசாரித்தார். அவர்களின் குடும்பத்தாரை பற்றியும் கேட்டறிந்தார். இதேபோல், துபாயில் பணியாற்றும் இந்தியாவை சேர்ந்த நர்ஸ்களிடமும் அவர் பேசினார்.

Tags : Nurses Fighting Corona , Corona, Nurses, Mohanlal, Surprise
× RELATED அசாமில் 7 ரயில்கள் ரத்தால்...