×

காலி பாத்திரம்: மோடியின் பேச்சை விமர்சித்த பிரகாஷ்ராஜ்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் உரையாற்றினார். கொரோனா ஊரடங்கு நீடிக்கும் என்ற அறிவித்த அவர், ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் வரப்போவதாகவும் சொன்னார். மோடியின் இந்த உரையை பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள்.  இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் மோடியின் இந்த உரையை அவரது பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில் “இன்று (நேற்று முன்தினம்) இரவு 8 மணி.. ஒரு வெற்று பாத்திரம் சும்மா அதிக சத்தம் போட்டது” என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் உரையில் ஒன்றும் இல்லை என்பதை அவர் இப்படி குறிப்பிட்டிருந்தார்.


Tags : Prakashraj ,Modi ,speech , Empty character, Modi, Prakashraj
× RELATED பிரதமர் மோடி பேச்சு உலகம் சந்தித்து...