×

கொரோனா வீசிய பாசக்கயிறு பொலபொல 24,385 பேருக்கு ஆயுசு கெட்டி

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்த 74,281 பேரில், 24 ஆயிரத்து 385 பேர் சிகிச்சையில் குணமாகி இருக்கின்றனர்.  நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:  கடந்த 24 மணி நேரத்தில் 3,525 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், நோய் பாதித்த 122 பேர் உயிரிழந்துள்ளனர்.  நோய் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47,480 ஆக உள்ளது. 24,385 பேர் சிகிச்சையில் குணமடைந்து உள்ளனர். இதுவரை 32.83 சதவீதம் நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்.

நேற்று முன்தினம் காலையில் இருந்து பதிவான 122 உயிரிழப்புக்களில்  மகாராஷ்டிராவில் 53, குஜராத் 24, டெல்லி 13, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 8 என பதிவாகி உள்ளது. இதேபோல், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தலா 4 பேர், தெலங்கானா, உத்தரப் பிரதேசத்தில் தலா 2 பேர் மற்றும் ஆந்திரா, பஞ்சாப், சண்டிகர், புதுச்சேரியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் உயிரிழந்த 2415 பேரில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 921 பேர் உயிரிழந்துள்ளனர்.

 குஜராத்தில் 537 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக மத்தியப் பிரதேசதில் 228 பேரும், மேற்கு வங்கத்தில் 198பேரும், ராஜஸ்தானில் 117 பேரும், டெல்லியில் 86 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 82 பேரும், தமிழகத்தில் 61 பேரும், ஆந்திராவில் 46 பேரும் இறந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona, curfew, outcrop,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு தள்ளுபடி