×

கொரோனா கதை முடிக்க 7,535 கோடி கடனுதவி: பிரிக்ஸ் வங்கி அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள மனித, சமூக மற்றும் பொருளாதார இழப்புகளில் இருந்து இந்தியா விடுபட, பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி ரூ.7,535 கோடி கடன் அளித்துள்ளது. ஷாங்காயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி கடந்த 2014ம் ஆண்டு இந்திய வங்கி தலைவர் கே.வி. காமத் தலைமையில் பிரிக்ஸ் நாடுகளின் அவசர தேவைக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வங்கியின் துணைத் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜியான் ஜூ நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி அதன் உறுப்பினர் நாடுகளுக்கு பேரழிவின் போது உதவுதவற்காக அர்ப்பணித்துள்ளது.

இதன் இயக்குனர்கள் கூட்டம் கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடந்தது. இதில் இந்திய அரசு கேட்டு கொண்டதற்கு இணங்கி அவசர கடன் உதவி  அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சுகாதாரத் துறையின் அவசரத் தேவைகளுக்கும் சமூகத்தை வலுப்படுத்தவும், கடந்த ஜனவரி மாதம் முதல் இந்திய அரசு செலவு செய்ததற்கு உதவியாகவும்  வரும் 2021ம் ஆண்டு வரை கொரோனா சமூக பரவலைத் தடுக்கவும் இந்தியாவுக்கு இந்த நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ. 7,535 கோடி கடன் உதவியின் மூலம் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட மனித, சமூக, பொருளாதார இழப்புகளில் இருந்து இந்தியா விடுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Briggs Bank ,Corona , Corona, Briggs Bank, Curfew,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...