×

தலைப்பு பிரமாதம் உள்ளே டுபாக்கூர்: ப.சிதம்பரம் கிண்டல்

புதுடெல்லி: பிரதமர் மோடி அறிவித்த பொருளாதார நிவாரணம் பற்றிய அறிவிப்பானது தலைப்புக்கு பிரமாதமாக உள்ளது; உள்ளே வெற்று பக்கமாக உள்ளது,’ என்று ப. சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். நாடு முழுவதுமான ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தை சீரமைக்க பிரதமர் மோடி ரூ 20 லட்சம் கோடிக்கு பொருளாதார சலுகை அளிக்கும் அறிவிப்பை நேற்று முன்தினம் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது வெளியிட்டார். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

நேற்று (நேற்று முன்தினம்) பிரதமர் மோடி அறிவித்த பொருளாதார நிவாரண சலுகை அறிவிப்பு, வெறும் தலைப்பு மட்டுமே உள்ள வெற்று பக்கமாக தெரிகிறது. இன்று (நேற்று) இந்த வெற்று பக்கத்தை நிதியமைச்சர் நிரப்ப இருக்கிறார். பொருளாதாரத்தை சீரமைக்க அரசு செலவிடும் ஒவ்வொரு கூடுதல் ரூபாயும்  எப்படி செலவிடப்படுகிறது, யாருக்கு அந்த பணம் கிடைக்கிறது என்று கணக்கிடப்படுகிறது.  முதலில், பல நூறு கிலோ மீட்டர் தூரம் தங்களது சொந்த மாநிலத்துக்கு சாலை வழியாக நடந்து செல்லும் ஏழைகள், பசியால் வாடுவோர், பாதிக்கபட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று பார்ப்போம். வறுமையின் அடிக்கோட்டில் இருக்கும் பாதிக்கப்பட்ட 13 கோடி குடும்பங்களை இந்த நிதி உண்மையிலேயே சென்றடைகிறதா என்று ஆராய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : PM Modi, P. Chidambaram, Economic Relief
× RELATED தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள...