×

சிட்டாய் பறக்கிறது இந்தியா 60ல் இருந்து 12வது இடம்

புதுடெல்லி: உலகில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் 60வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 12வது இடத்துக்கு வந்துள்ளது.
உலகில் 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் தற்போது ரஷ்யா என பல்வேறு நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது இப்போது இந்தியாவையும் ஆட்டி படைக்கிறது. நேற்று முன் தினம் நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,029 ஆக இருந்தது. அன்று மட்டும் 121 பேரை கொரோனா காவு வாங்கியது. ஒரே நாளில் அதிகப்பட்சம் இறப்பு ஏற்பட்ட 2வது நாளாக அது அமைந்தது.

கடந்த மாதம் வரையில் உலகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 60வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது  71,264 பேர் பாதிக்கப்பட்ட கனடாவை பின்னுக்கு தள்ளி 12வது இடத்தை எட்டியுள்ளது.  மேலும், 84,011 பேர் பாதிக்கப்பட்டுள்ள சீனாவையும் நெருங்கி வருகிறது.  2 நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்த நாட்களில் அதிகப்பட்சமாக இந்தியாவில் முறையே 3613, 4308 பேர் என புதிதாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் பறக்க இதுவும் ஒரு காரணமாக இருந்தது.  தற்போது, பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், வெளிமாநில தொழிலாளர்களின் பயணங்கள் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.


Tags : India ,Chitai , World, Corona, India, Curfew
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!