×

ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? சொந்த ஊர் திரும்பி வருபவர்களுக்காக தனிமை முகாம் அமைத்த கிராம மக்கள்: ஓலை குடிசைகளில் சகல வசதி

இம்பால்: கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலத்தில் இருந்து மணிப்பூருக்கு திரும்பும் மக்களை தனிமைப்படுத்த வசதியாக சகல வசதிகளுடன் 80 குடிசைகளை கிராம மக்களே உருவாக்கியுள்ளனர்.  மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா தொற்று இதுவரை 2 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ெவளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் மணிப்பூர் மக்கள் 40 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக முதல்வர் பைரேன் சிங் தெரிவித்திருந்தார்.  சென்னையில் தவித்த 1140 மணிப்பூர் மக்கள் கடந்த 11ம் தேதி சிறப்பு ரயிலில் புறப்பட்டு சென்றனர். மணிப்பூர் ஜிரிபாம் ரயில் நிலையத்தை அவர்கள் நேற்று வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ குழுவினரால் சோதனை நடத்தப்பட்டு அவர்கள் சொந்த ஊருக்கு 50 பஸ்களில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், சேனாபதி மாவட்டம், துங்க்ஜாய் கிராமத்தில் தங்கள் ஊருக்கு திரும்பி வருபவர்களை தனிப்படுத்துவதற்காக 80 குடிசைகளை அமைத்து, கிராம மக்களே தனிமை முகாம்களை அமைத்துள்ளனர். வெளிமாநிலங்களில் ஒவ்வொரு குடிசையிலும் ஒருவர் தங்க வைக்கப்படுவார். இந்த குடிசையில் தண்ணீர், அத்தியாவசிய உணவு பொருட்கள், படுக்கை வசதி, தனி கழிவறை, கேஸ் டேபிள், மின்வசதி என பல அடிப்படை வசதிகள் உள்ளன.  கிராம மக்களின் இந்த முயற்சிக்கு கிராம நிர்வாகமும் கை கொடுத்துள்ளது. இந்த செயலை முதல்வர் பைரேன் சிங் பாராட்டியுள்ளார்.  இது குறித்து டிவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், `வெளிமாநிலங்களில் இருந்து துங்க்ஜாய் கிராமத்துக்கு வருபவர்களை தனிமைப்படுத்துவதற்காக 80 குடிசைகளை உருவாக்கியுள்ள கிராம நிர்வாகத்துக்கு எனது பாராட்டுக்கள். அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்,’ என குறிப்பிட்டுள்ளார்.



Tags : Raman Andal ,Ravana Annal ,homeowners ,isolation camps , Corona, Curfew, Outlander, Manipur,
× RELATED வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க...