×

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: கேரளாவில் மது பிரியர்கள் ஏமாற்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கள் விற்பனைக்கு அனுமதி உண்டு. மாநிலம்  முழுவதும் 5,185  கள்ளுக்கடைகள் உள்ளன. கொரோனா காரணமாக கேரளாவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கள்ளுக்கடைகள், மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், 13ம் தேதி (நேற்று) முதல்  கள்ளுக்கடைகள் மட்டும் திறக்கப்படும் என கேரள முதல்வர் பினராய் விஜயன்  அறிவித்தார். அதன்படி, நேற்று காலை 9  மணியளவில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம்  உட்பட பல இடங்களில் கடைகள்  திறக்கப்பட்டன. ஆனால், கள் வரத்து  குறைந்ததால் பெரும்பாலான கடைகள்  மூடப்பட்டிருந்தது. கள்  குடிப்பதற்காக ஆசையாக வந்த மது பிரியர்கள், இருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இருப்பினும், ஒரு சில தினங்களில் கள் உற்பத்தி அதிகரிக்கப்படும் என   தெரிவிக்கப்பட்டுள்ளது.

17க்கு பிறகு மது விற்பனை
கேரளாவில் 17ம் தேதிக்கு பின் மதுக்கடைகளை திறப்பது குறித்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் மதுக்கடைகளை திறப்பதற்கு முன்பாக ஆன்லைனில் விற்பனை நடத்த தீர்மானிக்கப்பட்து. மேலும், இந்திய தயாரிப்பு அயல நாட்டு மது வகைகளுக்கு 10 முதல் 35 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கவும், கடைகளில் மதுவை பார்சலாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி. 560 ரூபாய் விலை உள்ள பிராந்தி 620 ரூபாயாகவும், 910 ரூபாய் விலை உள்ள ஓட்கா 1010 ரூபாயாகவும், 1170 ரூபாய் உள்ள ஓட்கா 1300 ரூபாயாகவும், 1290 ரூபாய் விலையுள்ள ரம் 1440 ரூபாயாகவும் உயரும். அனைத்து வகை மதுவிற்கும் விலை உயர்த்தப்பட உள்ளது.


Tags : lovers ,Kerala ,Kerala Winemakers , Corona, curfew, Kerala, wine lovers
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு