×

தமிழகத்தை மட்டுமின்றி தென் மாநிலங்களையும் குதறுகிறது கோயம்பேடு

கோயம்பேடு மார்க்கெட்டில் பரவிய கொரோனா வைரஸ், தமிழகத்தை மட்டுமின்றி தென் மாநிலங்கள் அனைத்தையும் குதறி வருகிறது.
தமிழகத்தில் கட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது சென்னை கோயம்பேடு சந்தையைால்கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 9 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதில், கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 3 ஆயிரத்தை நெருங்கிறது.  கடந்த மாதம் 27ம் தேதி கோயம்பேடு சந்தையில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது, தமிழகம் மட்டுமின்றி தென்மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் கோயம்பேடு சந்தை மூலம் கொரோ பரவியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ஆந்திராவில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி செவ்வாய்கிழமை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 20 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள். இந்த 33 பேரில் 10 பேர் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், இந்த 10 பேரும் கோயம்பேடு சந்தைக்கு சென்றதால் தொற்று பரவியது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சித்தூர் மாவட்டத்தில் கொேரானா பாதித்தவர்கள் எண்ணிக்கை 131 ஆனது.

புதிதாக தொற்று பரவியுள்ள 9 பேர் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கர்னூலை சேர்ந்த 9 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தை ேசர்ந்த 4 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் ஏற்றி வந்த வயநாடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர், கிளீனருக்கு இந்த தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து லாரி ஓட்டுனரின் தாயார், மனைவி மற்றும் கிளீனரின் மகன் உள்பட  4 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளதாக கேரள அரசு தெரிவித்து உள்ளது.

கர்நாடகாவிலும் சிலருக்கு பரவியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாததும், பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்க மறுத்ததும் கொரோனா விஸ்வரூபம் எடுக்க காரணமாக கூறப்படுகிறது.

Tags : Koyambedu ,Tamil Nadu ,states , Tamil Nadu, Southern States, Coimbatore, Corona, Curfew
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...