×

சென்னையில் இந்த வாரம் வெயில் 113 டிகிரி வரை உயர வாய்ப்பு

சென்னை: சென்னையில் இந்த வாரம் வெயில் 113 டிகிரி வரை உயர வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் புயல் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது உறுதியாகிவிட்டது. வங்கதேசத்தில் புயல் கரைகடக்கும் என்று ஒரு சாராரும், மியான்மரில் தான் கரை கடக்கும் என்று சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர். புயல் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா வழியாக கடந்து செல்லும் என்று தற்போது எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கடந்து செல்லும் போது, இந்த பகுதிகளில் உள்ள ஈரப்பதத்தை முற்றிலுமாக உறிஞ்சி எடுத்து சென்றுவிடும். இதனால் அதிக வெப்ப காற்று வீசும். சென்னையில் வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெயில் 113 டிகிரியாக இருக்கும் வாய்ப்புகளும் உண்டு.


Tags : Chennai, sunny 113 degrees
× RELATED கத்திரி வெயில் முடிவடைந்த...