×

டிஜிபி திரிபாதி உத்தரவு: 14 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் 14 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக டிஜிபி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவில் இருந்த பார்த்திபன் தூத்துக்குடி டிஎஸ்பியாகவும், தூத்துக்குடி மாவட்ட டிஎஸ்பியாக இருந்த கலைகதிரவன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டிஎஸ்பியாகவும், தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி டிஎஸ்பியாக இருந்த ஜெபராஜ் தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாகவும், தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாக இருந்த கிருஷ்ணசாமி கோவை மாவட்ட  சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாகவும், தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பியாக இருந்த சண்முகம் மதுரை மாவட்டம் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாகவும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த நாகராஜன் தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாகவும், வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பியாக இருந்த பழனிசெல்வம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை டிஎஸ்பியாகவும், விழுப்புரம் மாவட்டம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த தேசிகன் சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுதீர்லால் திருநெல்வேலி ரயில்வே டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த வெற்றிசெல்வன் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், கோவை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாக இருந்த ரவிக்குமார் கோவை நகர சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாகவும்,

சென்னை எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த ரமேஷ் பாபு கோவை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும், தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த புகழேந்தி திண்டுக்கல் போதை நுண்ணறிவு பிரிவு சிஐடி டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த ராஜ்குமார் திருநெல்வேலி காவலர் பயிற்சி மையம் டிஎஸ்பியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : DGP Tripathi ,workplace transfer , DGP Tripathi, 14 TSPs, Workplace Transfer
× RELATED 34 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு