×

ராமநாதபுரம் கல்லூரி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஜன்னலை உடைத்து தப்ப முயற்சி: அடிப்படை வசதி செய்து தரவில்லையென புகார்

சாயல்குடி: ராமநாதபுரம் கல்லூரியில் தனிமையில் இருந்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் போதிய அடிப்படை வசதி செய்து கொடுக்காததால், ஜன்னலை உடைத்து தப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் தேவிப்பட்டினம் சாலையிலுள்ள அண்ணா பொறியியல் கல்லூரி, திருவாடானை, பார்த்திபனூர், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி ஆகிய ஊர்களில் அரசு கல்லூரி, பள்ளிகளில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள், மீனவர்கள், பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 இவர்கள், தங்களுக்கு போதிய அளவு உணவு வழங்குவதில்லை. சுகாதாரமற்ற கழிவறையால் சிரமமடைகிறோம். குடிப்பதற்கும், குளிப்பதற்கும் போதிய தண்ணீர் வசதியில்லாமல் அவதிப்படுகிறோம் என புகார் தெரிவித்தவண்ணம் இருந்தனர். ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 19 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ளவர்களுக்கு  ரத்த பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யவில்லை.

மேலும் பூச்சிகள் தொல்லை, பயன்படுத்த முடியாத கழிவறைகள், சுகாதாரமற்ற குடிநீர் என பல்வேறு பிரச்னைகள் இருந்ததாகத் தெரிகிறது,
இதனால் இங்கு தங்கியிருந்தவர்களில் சிலர் ஜன்னலில் ஓட்டை போட்டு, உடைத்து அதன் வழியே தப்ப முயன்றனர். இதனை பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பார்த்து தடுத்துள்ளனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து முகாமில் தங்க வைத்தனர். பிறகு போலீசார் கல்லூரியில் திறந்தவெளி பகுதிகளை கருவேல முட்களை கொண்டு அடைத்தனர்.


Tags : college camp ,Ramanathapuram ,facilities , Ramanathapuram College Camp, Corona, Curfew
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...