×

பாடத் திட்டங்களில் புதுமை சவுதியில் மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம்: இளவரசர் சல்மான் அதிரடி

ரியாத்: ‘சவுதி அரேபியாவில் மாணவர்களுக்கு இந்திய புராணங்களான ராமாயணம், மகாபாரதம் பயிற்றுவிக்கப்படும்,’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தொலைநோக்கு பார்வை -2030’ என்ற திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவில் பல்வேறு மாற்றங்களை அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் மேற்கொண்டு வருகிறார். அந்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் பெண்களுக்கு அவர் பல்வேறு சுதந்திரங்களை அளித்தார். இதன்மூலம், உலகளவில் அவருடைய பெயர் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் தொலைநோக்கு பார்வை திட்டத்தின் கீழ் பிற  நாடுகளின் வரலாறு, கலாசாரம் குறித்த பாடங்களை தனது நாட்டு பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக  சவுதி மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம் கற்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கலாசார அறிவை விரிவுப்படுத்துவதற்காக குறிப்பாக, இந்திய கலாசாரங்களான யோகா, ஆயுர்வேதம் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த திட்டத்தின் கீழ் ஆங்கில மொழியும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சவுதி அரேபிய அரசின் இந்த நடவடிக்கை குறித்து நவுப் அல் மார்வாய் என்பவர் தனது குழந்தையின் புத்தகத்தை ஸ்கீரின் ஷாட் எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், தனது பதிவில், ‘பாட புத்தகத்தில் பலவிதமான கலாசாரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்து மதம், பவுத்தம், ராமாயணம், கர்மா , மகாராபாரம் மற்றும் தர்மம் ஆகியவை குறித்த கருத்துக்கள் மற்றும் வரலாறு ஆகியவை உள்ளடங்கி இருக்கின்றன. இதனால், மாணவர்கள் புதிய பாட த் திட்டத்தில் ராமாயணம், மகாபாரதத்தை விவரமாக கற்றுக் கொள்வார்கள்,’ என கூறியுள்ளார்….

The post பாடத் திட்டங்களில் புதுமை சவுதியில் மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம்: இளவரசர் சல்மான் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Prince Salman ,Riyadh ,Saudi Arabia ,Saudi ,Ramayana ,Prince ,
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!