×

தமிழக மக்களை அனுமதிக்காததால் புதுவையில் கடைகளை திறந்தும் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை: காற்று வாங்கும் நிறுவனங்கள்

புதுச்சேரி: புதுவையில் கடைகளை திறந்தும் தமிழக மக்களை அனுமதிக்காததால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என வியாபாரிகள் புலம்பி வருகின்றனர். இதேபோல் பெரிய நிறுவனங்களும் திறக்கப்பட்ட நிலையில் அங்கு மக்கள் வரத்து இல்லாமல் காற்று வாங்கும் சூழல் நிலவுகிறது. நாடு முழுவதும் 3 கட்டமாக அறிவிக்கப்பட்ட ெகாரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை அமலில் உள்ளது. அதன்பிறகும் புதிய மாற்றங்களுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்துள்ளார். இதனிடையே 2ம் கட்ட ஊரடங்கு முடிந்தவுடன் மே 4ம்தேதி முதல் புதுவையில் அனைத்து கடைகளையும் திறக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

இதையடுத்து புதுவையில் ஒரு மாதத்திற்கு மேலாக பூட்டிக் கிடந்த அனைத்து கடைகளும், நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் திறக்கப்பட்டன. இதனால் பலகோடி உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சகஜ நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக பகுதியான கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி இருப்பதால் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் மாநில எல்லைகளில் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு வருபவர்களை மட்டுமே புதுச்சேரி போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீளாத புதுச்சேரி மக்களும் குறிப்பிட்ட சில அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே கடைகளுக்கு சென்று வருகின்றனர். இதன் காரணமாகவும், தமிழக மக்களின் வருகை முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாலும் புதுச்சேரியில் கடைகளை திறந்தும் பலனில்லாத சூழல் உள்ளது. எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.  இதுதவிர பெரிய, பெரிய தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டும் அங்கு மக்கள் வரத்து இல்லாமல் காற்று வாங்கும் நிலையே உள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நேருவீதி, கொசக்கடை, ரங்கபிள்ளை வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை ஆகியவை வெறிச்சோடி காணப்படுகிறது.

புதுவையில் மீண்டும் வியாபாரம் களைகட்ட வேண்டுமெனில், அரசுக்கு வரி மூலம் வருவாய் அதிகரிக்கப்பட வேண்டுமெனில் தமிழக மக்களை வழக்கம்போல் பொருட்களை வாங்கிச் செல்ல எல்லைகளில் எந்த சோதனையுமின்றி அனுமதிக்க வேண்டுமென ேகாரிக்ைக எழுந்துள்ளன. இதுபற்றி அரசின் கவனத்துக்கும் வியாபாரிகள், தொழிலதிபர்கள் கொண்டு சென்றுள்ள நிலையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தளர்வுகளை மாநில அரசு அதிகரித்து சகஜ நிலைக்கு புதுச்சேரி மீண்டும் திரும்புவதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Tags : companies ,business opening ,Tamil Nadu ,shops ,business , Innovation, business, no
× RELATED 165 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழ்நாடு வருகை..!!