×

கொடைக்கானலில் சேதமடைந்த படகுகளை சீரமைக்கும் பணி துவக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான படகுகளை சீரமைக்கும் பணியில் தொழிலார்கள் ஈடுபட்டுள்ளனர். மலைகளின் இளவரசி கொடைக்கானல் தற்போது குளு குளு சீசன் நிலவி வருகிறது. வழக்கமாக கொடைக்கானலுக்கு மே மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சேதமடைந்த படகுகளை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா அருகில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான படகு இல்லத்தில் சேதமடைந்த படகுகளை பணியாளர்கள் சீரமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். படகுகள் சீரமைப்பு மற்றும் துடுப்புகளுக்கு வண்ணம் தீட்டும் பணி நடக்கிறது. ஊரடங்கு தளர்வு செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் வர இன்னும் ஓரிரு மாதங்களாகும். அதன்பின்னரே கொடைக்கானல் புத்துயிர் பெறும். இதனையொட்டி சீரமைப்பு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளில் சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Kodaikanal , Kodaikanal, damaged boat, repair work
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...