×

ஒரு நேரத்தில்.. ஒரே ஒருத்தர் மட்டும் சாப்பிடும் ஹோட்டல்; சர்வர் கூட இல்லை; சமூக விலகலின் உச்சக்கட்டம்!!

ஸ்வீடன்  : ஸ்வீடனில் தனி நபர் இடைவேளியை மையப்படுத்தி செயல்படும் உணவகம் ஒன்று வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்வீடன் நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 3,300-ஐ தாண்டியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, தனிமனித இடைவெளி, சமூக விலகல் உள்ளிட்டவற்றை பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவை விரட்டும் வகையில் சமூக விலகல், தனி நபர் இடைவேளியை மையப்படுத்தி ஸ்வீடனில் இயங்கி வரும் ஹோட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்வீடன் நாட்டில் “டேபிள் ஃபார் ஒன்” என்கிற பெயரில் இயங்கி வரும் ஹோட்டல் ஒன்று சமூக விலகலை கருத்தில்கொண்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் மேசை, நாற்காலி மட்டுமே போடப்பட்டிருக்கும். அதிலும் ஒரே ஒருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு சர்வர் யாரும் கிடையாது. கயிறு ஒன்றில் பிக்னிக் கூடை கட்டப்பட்டிருக்கும். அதில்தான் உணவு வைத்து மேசைக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஹோட்டலை நடத்தும் ரஸ்முஸ் பெர்சன், லின்டா கார்ல்சன் என்ற ஸ்வீடனைச் சேர்ந்த தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Tags : hotel , Hotel, server, social exclusion, Sweden
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...