×

50 நாட்கள் ஊரடங்கிற்கு பிறகு ஷாப்பிங் மால் திறப்பு : குப்பையில் வீசப்பட்டதை போல் பூஞ்சை படிந்து காட்சியளித்த தோல்பொருட்கள்!!

மலேசியா :கொரோனா ஊரடங்கிற்காக 50 நாட்களுக்கும் மேலாக பூட்டிக்கிடந்த மலேசிய ஷாப்பிங் மால் ஒன்றின் ஷோரூமில் தோல்பொருட்கள் பூஞ்சை படிந்து குப்பையில் வீசப்பட்ட பொருட்களை வைத்திருப்பது போல காட்சி அளித்ததால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் காரணமாகப் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஊரடங்கின் காரணமாக மலேசியாவில் உள்ள பிரபல மால்களில் ஒன்றான மெட்ரோ ஜெயா மாலும் கடந்த மார்ச் 18ம் தேதி மூடப்பட்டது. இதனால் குளிர்சாதன வசதியும் நிறுத்தப்பட்டது. இதனிடையே மால் மீண்டும் திறக்கப்பட்டுக் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அங்கிருந்த பிரபல தோல் பொருட்கள் விற்பனை நிலையத்தை மீண்டும் திறந்து பார்த்தபோது, அங்கிருந்த கைப்பைகள், ஷூ, தோல் பை உட்படத் தோல் பொருட்கள் அனைத்தும் புஞ்சை பிடித்து குப்பையில் வீசப்பட்ட பொருட்களைப் போன்று காட்சியளித்தன.

இதனைப் பார்த்து அதிர்ந்து போன ஊழியர்கள், அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் 10 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எனத் தெரிவித்தார்கள். 50 நாட்களாகக் குளிர்சாதன வசதி நிறுத்தப்பட்டதால் தோல் பொருட்கள் மீது புஞ்சை படியும் சூழ்நிலை உருவானது. தற்போது அந்த பொருட்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Tags : Curfew Shopping Mall , Curfew, Shopping, Mall, Opening, Rubbish, Fungi, Peanuts
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...