×

விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த சீனாவின் மிகப்பெரிய ராக்கெட் பாகம் : 30 ஆண்டுகளில் இல்லாத ராட்சத வான்வெளி பொருள் இதுவாகும்..

பெய்ஜிங் : சீனா அண்மையில் விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட் ஒன்றின் மிகப்பெரிய பாகம் மீண்டும் பூமியில் விழுந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் விண்வெளியிலிருந்து பூமியில் விழுந்த மிகப்பெரிய வான்வெளி பொருள் இதுவே ஆகும். சீனாவின் லாங் மார்ச் 5-பி ராக்கெட் கடந்த மே 5ம் தேதி மாலை 6 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த ராக்கெட் திடீரென பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து வடமேற்கு ஆப்பிரிக்காவில் மவுரித்தேனியா கடல் பகுதியில் விழுந்துள்ளது.

சுமார் 21 மீட்டர் நீளமும், 18 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட் பாகம் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது சேதமடைந்து 12 மீட்டர் நீளமுள்ள பாகம் மட்டுமே ஆப்பிரிக்காவில் விழுந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மே 11ம் தேதி அன்று இந்த ராக்கெட் பாகம் பூமியில் விழுந்துள்ளதாக அமெரிக்க வான்படை தெரிவித்துள்ளது.  

மனித நடமாட்டம் இல்லாத கடல் பகுதியில் விழுந்ததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ராக்கெட்டின் எச்சங்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்காவில் மீண்டும் விழக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது. கடந்த 1991ம் ஆண்டில் சோவியத் யூனியனின் சாலியட் -7 விண்வெளி நிலையத்திலிருந்து 39 டன் எடையுள்ள மிகப்பெரிய பாகம் ஒன்று பூமியில் விழுந்தது. அதன்பின் பூமியில் விழும் மிகப்பெரிய வான்வெளி பொருள் இதுவே ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : China ,space ,earth , Space, earth, fallen, china, rocket, part, 30, years, giant aerospace, object
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...