×

சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல்.. சீனாவில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 5 வைரஸ் நோய்கள் பரவியுள்ளது : அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன் : சீனாவில் இருந்து கடந்த இருபதாண்டுகளில் 5 வைரஸ் நோய்கள் பரவியுள்ளதாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் உலக நாடுகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் உயிர்பலிகள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடுமையான உயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால், உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது, கொரோனாவால் உலக நாடுகளில் 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததற்குச் சீனா தான் பொறுப்பேற்க வேண்டும்.சீனாவின் உகானில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது. கடந்த 20 ஆண்டுகளில் சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், கொரோனா உள்ளிட்ட 5 வைரஸ் நோய்கள் சீனாவில் இருந்து பரவி உள்ளது  (5-வது வைரஸ் பெயரை அவர் குறிப்பிடவில்லை). கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களை அனுப்ப அமெரிக்கா முன்வந்தபோது, அதை ஏற்கச் சீனா மறுத்துவிட்டது.  சீனாவில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான சான்றுகளை அமெரிக்கா தேடி வருகிறது என கூறினார்.  


Tags : Sars ,US ,China , Sars, bird flu, swine flu, china, 20 years, 5, viral diseases, spread, USA, charge
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது