×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 35,496 விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 136 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து விலையேற்றம் காணப்பட்ட நிலையில் இன்று திடீரென்று விலை குறைந்துள்ளது.சென்னையில் இன்று (மே 13) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,437 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,454 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நேற்று 35,632 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 136 ரூபாய் குறைந்து 35,496 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையிலும் இன்று சிறிதளவு வீழ்ச்சி காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.46.60 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.46.80 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 46,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Jewelery, Gold, Price, Shaving, Rs. 35,496, sales
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...