×

விலை வீழ்ச்சியால் செடியிலேயே அழுகும் கோஸ்: லட்சக்கணக்கில் நஷ்டம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் கோசுக்கு உரிய விலை கிடைக்காததால், செடியிலேயே அழுகி வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம் பகுதியில் பூக்கள், காய்கறிகள் பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் ரோஜா, ஜெர்பரா, கார்னேஷன் போன்ற மலர்கள் ஊரங்கால் போக்குவரத்து இல்லாததால் குப்பையில் கொட்டப்பட்டு வருகிறது.  அதேபோல் முட்டைகோஸ், கத்தரிக்காய், தக்காளி, கேரட் போன்ற காய்கறிகளும்  சந்தைபடுத்த முடியாததால் அறுவடை செய்யப்படாமல் தோட்டத்திலேயே விடப்பட்டுள்ளது.

கெலமங்கலம் பகுதியில் 200 ஏக்கரில் பயிரிட்டுள்ள முட்டைக்கோஸ் அறுவடை செய்யாததால் விவசாயிகளுக்கு லட்சகணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 80 கிலோ மூட்டை ₹30 முதல் ₹40க்கு விற்பனையாவதால், அறுவடை கூலி கூட கிடைக்காத நிலையில், முட்டைகோஸ் பறிக்காமல் தோட்டத்திலேயே அழுகி வருகிறது. இதனால், அரசு தோட்டக்கலை துறை மூலம் காய்கறிகளை உரிய விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும், வங்கி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : plants ,millions , Cause , price declines, plants,millions, losses
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...