×

மழையில்லாததால் நிலத்தடிநீர் குறைந்தது மல்லிகை சாகுபடியை காக்க கழிவுநீர் பாசனம்: ஆண்டிபட்டி விவசாயிகள் வேதனை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, மாயாண்டிபட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, தெப்பம்பட்டி, பாலக்கோம்பை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகைப் பூ சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் விளையும் மல்லிகைப் பூக்களை விவசாயிகள் அதிகாலையில் பறித்து, ஆண்டிபட்டியில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனை செய்வர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், விவசாயிகள் சில்லறை விற்பனையில் ஈடுபட்டனர். போதிய மழை இல்லாததால், ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தோட்டத்தில் உள்ள மல்லிகைச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகின்றனர்.  
இந்நிலையில், கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, கதிர்நரசிங்கபுரம் பகுதிகளில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தேக்கி வைத்து, மின்மோட்டார் மூலம் மல்லிகைச் செடிகளுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஆண்டிபட்டி பகுதியில் போதிய மழை இல்லாததால், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், மல்லிகை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மல்லிகைப் பூக்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இந்நிலையில், டேங்கர் தண்ணீர் வாங்கி ஊற்றலாம் என்றால், ஒரு டேங்கருக்கு ரூ.1200 கேட்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 6 டேங்கர் தண்ணீர் தேவை. இதனால், கழிவுநீரை பாய்ச்சி மல்லிகையை காப்பாற்றி வருகிறோம். மல்லிகை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றனர்.

Tags : Antipathy farmers , Sewage ,protect, cultivation , orchids, lack of rain: Antipathy farmers
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...