×

வத்திராயிருப்பு அருகே கிராமத்திற்குள் புகுந்து களேபரம் செய்த கரடி

* பட்டாசு வெடித்தும் நகராமல் ‘ஓவர் அடம்’
* 5 மணிநேர போராட்டத்துக்கு பின் சிக்கியது

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கிராமத்திற்குள் புகுந்து களேபரம் செய்த கரடி, 5 மணிநேர போராட்டத்துக்கு பின் பிடிபட்டது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதி, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் கரடி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, குரங்கு, மந்தி, மான், மிளா உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில நாட்களாக கடும் வெயில் தாக்கத்தால் மலைகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் கிராமங்களுக்குள் நுழையத்தொடங்கி உள்ளன. யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் மாங்காய் ருசிக்காக மலையடிவாரத்தில் உள்ள மாந்தோப்புகளில் சுற்றித்திரிகின்றன.வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் கிராமத்தில் முட்புதருக்குள் நேற்று கரடி ஒன்று படுத்திருந்தது. முட்செடிகளை வெட்டச் சென்றவர்கள் கரடியை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் முட்புதருக்குள் பதுக்கியிருந்த கரடியை விரட்ட முயன்றனர். ஆனால் கரடி அங்கிருந்து நகராததால் பட்டாசுகளை வெடித்தனர். ஆனாலும் கரடி நகரவில்லை.

சிறிதுநேரம் கழித்து முட்புதரிலிருந்து வெளியேறிய கரடி, மகாராஜபுரம் கிராமத்திற்குள் புகுந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்கச் சென்றவர்கள் அச்சமடைந்தனர். சாலையில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த கரடியால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் அங்கிருந்து சென்ற கரடி, ஒரு வீட்டின் சந்தருகே ஒதுங்கி நின்றது. வனத்துறையினர் அதை சத்தமிட்டு விரட்டியபடியே இருந்தனர். இந்த போராட்டம் சுமார் 5 மணிநேரம் நீடித்தது. பின்னர் கரடி பொறுமை இழந்ததோ என்னமோ... சந்திலிருந்து வெளியேறி சாக்கடைக்குள் விழுந்தது. இதன்பின்னர் வலை வீசி கரடியை வனத்துறையினர் பிடித்தனர். கொரோனாவால் ஏற்கனவே மக்கள் பீதியில் உள்ள நிலையில், கிராமத்திற்குள் நுழைந்த கரடியால் மக்கள் பரபரப்பிற்கு ஆளாயினர்.

Tags : village ,Vatradayapuram ,Teddy , Teddy bear, entered ,village, Vatradayapuram
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...