×

சத்தி வனப்பகுதியில் பெண் யானை பலி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனச்சரகம் புதுவடவள்ளி வனப்பகுதியில் உள்ள   கரிக்கால்மொக்கை பகுதியில் சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னாட் தலைமையில்   வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் துர்நாற்றம்   வீசியதால் வனவிலங்கு இறந்து கிடக்கிறதா? என தேடி பார்த்தனர். அப்போது யானை  இறந்து  கிடப்பதை கண்டனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அருண்லால்  உத்தரவின்பேரில்,  யானையின் உடலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வன  கால்நடை மருத்துவர்  அசோகன் பிரேத பரிசோதனை செய்ததில் இறந்தது சுமார் 25  வயது மதிக்கத்தக்க பெண்  யானை என்பதும் குடற்புண் நோய் தாக்கி யானை  இறந்ததாக வனத்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப்பின்  யானையின் உடல் அதே பகுதியில்  வனவிலங்குகளுக்கு உணவாக விடப்பட்டது.

Tags : forest ,Sathi , Female elephant,killed , Sathi forest
× RELATED ரேஷன் கடையை சூறையாடிய யானை