×

மாலத்தீவில் இருந்து 83 தமிழர்களுடன் 2வது கப்பல் கொச்சி வருகை

திருவனந்தபுரம்:  மாலத்தீவில் இருந்து 698 இந்தியர்களுடன் கடற்படை கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சி வந்தது. இதில் ,இருந்த 187 தமிழர்கள்  தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்நிலையில்  தமிழகத்தை சேர்ந்த 83 பேர், கேரளாவை சேர்ந்த 91 பேர் உட்பட 15 மாநிலங்களை சேர்ந்த 202 பயணிகளுடன் ஐஎன்எஸ் மகர் என்ற கப்பல் நேற்று முன்தினம் மாலத்தீவில் இருந்து புறப்பட்டது. இந்த கப்பல் நேற்று மாலை 5.50 மணிக்கு கொச்சியை அடைந்தது. கப்பல் வந்த உடன் அதில் வந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பஸ்களில் உடல் பரிசோதனைக்கு பிறகு தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.Tags : Tamils ,Visit ,Maldives ,The Maldives 83 With Tamils 2nd Ship ,Kochi , Maldives, 83 Tamils, 2nd Ship, Cochin
× RELATED விசாகப்பட்டினம் அருகே வீசிய...