×

என் சோக கதைய்ய கேளு தாய் குலமே... அத கேட்டாதான் தாங்காது உங்க மனமே...பாடகி கனிகாவின் பிளாஸ்மா தானத்தை ஏற்க டாக்டர்கள் மறுப்பு

லக்னோ: ‘கொரோனாவில் இருந்து குணமடைந்த பாலிவுட் பாடகி கனிகா கபூரின் பிளாஸ்மா, சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கு ஏற்றதல்ல,’ என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் பாலிவுட் பிரபலம் பாடகி கனிகா கபூர்தான். வெளிநாடு சென்று திரும்பிய இவருக்கு கொரோனா இருப்பது கடந்த மார்ச் 20ம் தேதி உறுதியானது. அதற்கு முன்னதாக, வெளிநாட்டிலிருந்து திரும்பிய கனிகா, அரசு அறிவுறுத்தலின்படி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், லக்னோவில் நடந்த சில இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, அவரது மகன் துஷ்யந்த் சிங் மற்றும் சில அரசியல் தலைவர்களும் பங்கேற்றதால் சர்ச்சையானது. அவர்கள் அவரவர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

கனிகா உயிருக்கு ஆபத்தான நோயை, தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட கனிகா தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதனால், மற்ற கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் தனது பிளாஸ்மாவை தானமாக தர அவர் முன்வந்தார். இதுதொடர்பாக கடந்த 27ம் தேதி லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவமனையை அவர் அணுகி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, கனிகாவின் பிளாஸ்மா தானம் பெற தகுதியுடையதா என்பதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிளாஸ்மா தானம் செய்பவருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 புள்ளிக்கு அதிகமாகவும், எடை 50 கிலோவுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். நீரிழிவு, இருதய நோய், மலேரியா உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கக் கூடாது.

இந்நிலையில், கனிகாவின் மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவரது பிளாஸ்மா மற்ற நோயாளிகளுக்கு பயன்படுத்த ஏற்புடையதாக இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கிங் ஜார்ஜ் மருத்துவமனையின் டாக்டர் துலீகா சந்திரா கூறுகையில், ‘‘கனிகாவின் குடும்ப மருத்துவ அறிக்கையைின்படி அவரது பிளாஸ்மா தானமாக பெற ஏற்புடையதல்ல. மருத்துவ தர்மத்தின்படி, யாருடைய குடும்ப மருத்துவ அறிக்கையும் பகிர்ந்து கொள்ளப்படாது. கனிகா தனது பிளாஸ்மாவை தானமாக தர மறுக்கவில்லை. அவரது பிளாஸ்மா சிகிச்சைக்கு பயன்படுத்த முடியாது என்றாலும், ஆய்வுக்கு உபயோகப்படும். எனவே தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அவரது பிளாஸ்மா தானமாக பெறப்படும்,’’ என்றார்.

Tags : Kanika ,Doctors , Corona, singer Kanika, plasma donor, doctors
× RELATED கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்