×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி: பாதிப்பு 150 ஆக உயர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 25 பேர் இதுவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். குன்றத்தூரைச் சேர்ந்த வெல்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.      இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நெல் அறுவடை செய்யும் மிஷினை வைத்துள்ள தண்டாயுதபாணி என்ற விவசாயி  உயிரிழந்துள்ளார். மேலும், நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு பகுதியைச் சேர்ந்த 2 பேர், குன்றத்தூரைச் சேர்ந்த 10 பேர், பெரும்புதூரைச் சேர்ந்த 3 பேர், சிக்கராயபுரத்தைச் சேர்ந்த 3 பேர், நடுவீரப்பட்டைச் சேர்ந்த 2 பேர், இருங்காட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் என 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 2 ஆகவும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 150 ஆகவும் உயர்ந்துள்ளது. 25 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 123 பேர் சிகிச்சையில் உள்ளனர்.Tags : Kanchipuram district ,district ,Corona ,Kanchipuram district 2 , 2 dead in Kanchipuram district, Corona
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி