×

சொந்த ஊருக்கு புறப்பட்ட வடமாநில தொழிலாளர்களை மடக்கி பிடித்த போலீசார்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சேம்பர் உள்ளது. இதில், வடமாநிலத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள், கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து வேலை இல்லாமல் உள்ளனர்.  இந்நிலையில், இவர்கள் தங்களுக்கு  அடிப்படை வசதியும், உணவும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். அப்போது, ஊத்துக்கோட்டை டிஎஸ்பி அவர்களுக்கு உணவு வழங்கியும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தார்.

கடந்த வாரம்  திருக்கண்டலம் சேம்பரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வலியுறுத்தி திடீரென அக்கிராம சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  இதையறிந்த பெரியபாளையம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனையடுத்து, நேற்று காலை திருக்கண்டலம் பகுதியில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் திருக்கண்டலம் பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே செல்ல தொடங்கினர். இதையறிந்த பெரியபாளையம் போலீசார் அவர்களை நெய்வேலி பகுதியில் மடக்கினர். ஊத்துக்கோட்டை தாசில்தார் சீனிவாசன், பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் ஆகியோர் வடமாநில தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே மீண்டும் அவர்களை அனுப்பி வைத்தனர்.



Tags : homeland workers ,Northern ,ones ,hometown ,Hometown The Cops ,Departments ,Northern Territory , Hometown, Northern Territory workers, police
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...