×

மாரடைப்பால் கோமா நிலை அஜித்தை காப்பாற்ற சினிமா பாடல் சிகிச்சை

ராய்ப்பூர்:  சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி (74). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், சட்டீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல்வராக பதவி வகித்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த 2016ல், ‘ சட்டீஸ்கர் ஜனதா காங்கிரஸ்’ என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. ராய்ப்பூரில் உள்ள நாராயணா மருத்துவமனையில்  அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் கோமா நிலையில் உள்ளார். அவருடைய நரம்பு மண்டலம் முழுமையாக செயலிழந்து விட்டது.

எனவே, அவருடைய மூளையை செயல்பட வைக்க, டாக்டர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, அவருக்கு மிகவும் விருப்பமான பாடல்களையும், சினிமா பாடல்களையும் இயர்போன் மூலம் கேட்க வைக்கும் ஆடியோ தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை இயக்குனர் சுனில் கேம்கா தெரிவித்துள்ளார்.



Tags : Ajith , Heart Attack, Coma, Ajith, Cinema Song Therapy
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!