×

உடல்நிலை சீரானது மன்மோகன் சிங் வீடு திரும்பினார்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஞாயிறன்று திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயநோய் நிபுணர் மேற்பார்வையில் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. புதிய மருந்து உட்கொண்டதால் ஏற்பட்ட உடல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா என்றும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில், அவருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில், உடல்நிலை சீரானதால் நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.Tags : Manmohan Singh ,home , Healthy, Manmohan Singh, Home
× RELATED மத்திய அரசு, பிரதமருக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தல்