பேட்மின்டன் வீரருடன் டாப்ஸி காதல்

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் அதிகமாக நடித்து வருபவர் டாப்ஸி. இந்தியில் பிங்க் என்ற படத்தின் ரிலீசுக்கு பிறகு பிசியான அவர், டென்மார்க் நாட்டை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் பாரே என்பவரை சில வருடங்களாக காதலித்து வருகிறார் என்றாலும், அதை ஒரு கிசுகிசு பாணியிலேயே வைத்திருந்தார். இப்போது முதல்முறையாக தன் காதல் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். டாப்ஸி கூறியதாவது:

தற்போது என் சொந்த வாழ்க்கையில் ஒருவருடைய வரவை பற்றி வெளியே அறிவிப்பதிலும், அந்த நபரின் அன்பை ஏற்றுக்கொள்வதிலும் எனக்கு மிகப் பெரிய பெருமை இருக்கிறது. ஆனால், இந்த செய்தி ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்தியாக இடம்பெற வேண்டும் என்று நான் விரும்பவில்லை.

காரணம்,  திரையுலகில் இத்தனை வருடங்களாக நான் கடுமையாக உழைத்து சேர்த்த நல்ல பெயரும், இதுவரை கட்டிக் காத்து வந்த என்னைப் பற்றிய நம்பகத்தன்மையும் மாறிவிடும் என்பதுதான். என் சொந்த வாழ்க்கையில் ஒருவர் நிறைந்திருக்கிறார். இந்த விஷயம் என் குடும்பத்துக்கு எப்போதோ தெரியும். என் சகோதரி மற்றும் பெற்றோர் உள்பட அனைவருக்கும் நான் யாருடன் பழகுகிறேனோ அவரை கண்டிப்பாக பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது எனக்கு மிகவும் முக்கியம். அப்படி அவர்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்றால், தொடர்ந்து அவருடன் என்னால் பயணிக்க முடியாது. அடிக்கடி இதுபற்றி சம்பந்தப்பட்ட அவரிடம், ‘என் பெற்றோர் மறுத்தால், நம் நட்பு நீடிக்க வாய்ப்பு இல்லை’ என்று சொல்லியிருக்கிறேன். திருமணம் செய்துகொள்வது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை.

Related Stories:

>