×

சர்வதேச பட விழாக்களை ஆன்லைனில் பார்க்கலாம்

பிரான்ஸ் தலைவர் பாரீசில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாதான் உலகின் மிகப்பெரிய திரைப்பட விழா. இதில் உலகம் முழுவதிலுமிருந்தும் திரையுலகினர் கூடுவார்கள். இதற்கு அடுத்தபடியாக வெனிஸ் திரைப்பட விழா மிகப்பெரியது. மூன்றாவது இடம் சிட்னி திரைப்பட விழாவுக்கு
இந்த பட விழாக்கள் நடந்து முடிந்ததும், இந்தியாவில் முதலில் மும்பை திரைப்பட விழா நடக்கும், அதன்பிறகு கொல்கத்தா, அதைத் தொடர்ந்து கோவாவில் நடக்கும் இந்தியன் பனோரமா. தொடர்ந்து கேரள திரைப்பட விழா அதன்பிறகு சென்னை திரைப்பட விழா இதுதான் ஒவ்வொரு ஆண்டின் திரைப்பட விழாக்களின் சங்கிலி தொடர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக விழாக்கள் நடப்பது சந்தேகம்.சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற உலகப் படவிழாக்களில் ஒன்றான ‘விசன்ஸ் து ரீல்’ திரைப்படவிழாவை இணைய தளத்தில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.இப்படவிழாவில் 1000க்கும் அதிகமான படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்ட்ட 150 புதிய ஆவணப்படங்களை பார்வையாளர்கள் இணையதளத்தில் பார்த்தனர். அதன் பிறகு பார்வையாளர்கள் தந்த மதிப்பெண்கள், நடுவர்குழு தந்த மதிப்பெண்கள் அடிப்படையில் விருதுக்கு படங்கள் தேர்வு செய்யப்பட்டது.இதே நடைமுறை அனைத்து சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கடைபிடிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள் கடந்த ஏப்ரல் 24ந் தேதி முதல், வாரம் ஒரு படம் என்கிற வரிசையில் இணையத்தில் திரையிடப்படுகிறது. இதற்கு கட்டணம் 55 ரூபாய். இந்தப் பணம் தயாரிப்பாளருக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பட விழாக்களை ஆன்லைனிலே பார்க்கும் வசதி நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.



Tags : film festivals , International Film Festivals, Online
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...