×

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு வாய்ப்பு லாரன்ஸ் கோரிக்கை விஜய் ஏற்பு

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு படத்தில் பாட வாய்ப்பு தர வேண்டும் என்ற நடிகர் ராகவா லாரன்ஸின் கோரிக்கையை நடிகர் விஜய் ஏற்றார்.
மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன், விஜயின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை சிறப்பாக பாடி இருந்தான். இதை கேட்டு லாரன்ஸ் பாராட்டி இருந்தார். அத்துடன் விஜய்யின் படத்தில் அவருக்கு பாட வாய்ப்பு தர வேண்டும் என்றும் விஜய்யிடம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை விஜய் ஏற்றுக்கொண்டார். இது பற்றி லாரன்ஸ் கூறும்போது, ‘ஊரடங்கு முடிந்த பிறகு அந்த சிறுவனை அழைத்து வாருங்கள். நான் சந்திக்க ஆவலாக இருக்கிறேன் என்று விஜய் சொன்னார். படத்தில் பாட வாய்ப்பு தருவது பற்றி இசையமைப்பாளர் அனிருத்திடம் பேசுவதாக உறுதியும் தந்தார்’ என்றார்.

Tags : Lawrence ,Vijay , Disabled boy, Chance, Lawrence, Vijay
× RELATED 12 முதல் 17 சதவீதம் வரை பிளாஸ்டிக்...