×

கலெக்டர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை:  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து வருகிற 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், தனி கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வழக்கமான போக்குவரத்து தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், பணிகளுக்கு சென்று வர பொது போக்குவரத்தான பஸ், ஆட்டோ, கால்டாக்சி உள்ளிட்டவைகளுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, கலெக்டர்களின் ஆலோசனைகளை கேட்டு, வருகிற 18ம் தேதி முதல் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அரசு மற்றும் தனியார் பஸ்களை குறைந்த எண்ணிக்கை, குறைந்த பயணிகளுடன் இயக்குவது, கோயில்களில் பிரார்த்தனைக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Chief Minister , Collectors, CM, Corona, Consult
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...