×

ஆன்லைன் மூலமாக கொரோனா வார்டில் இருந்து பாடம் நடத்தும் நல்லாசிரியர்

லே: கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையிலும், மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக வகுப்பெடுத்து நல்லாசிரியருக்கான மாண்பை காட்டி உள்ளார் லடாக் பள்ளி ஆசிரியர். லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே மாவட்டத்தை சேர்ந்தவர் கிபாயத் ஹூசேன். லேம்டன் மாதிரி உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 30ம் தேதி இவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. உடனடியாக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் 9, 10ம் வகுப்பின் கணித ஆசிரியர் ஆவார். தான் கொரோவானால் பாதிக்கப்பட்டாலும், தனது மாணவர்களின் கல்வி எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கொரோனா வார்டில் இருந்தபடியே ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகிறார். ஜூம் ஆப் மற்றும் யூடியூப் மூலமாக தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை கணித பாடங்களை நடத்தி அசத்தி வருகிறார். அவர் கூறுகையில், ’’மாணவர்கள் தற்போது பள்ளிக்கு வர முடியாத நிலையில், அவர்களுக்கு எதிர்காலத்தில் கூடுதல் சுமை ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தேன். இதற்கு எனது பள்ளியும், மாநகராட்சியும் ஆதரவு அளித்தது.

மருத்துவமனையில் நெட்வொர்க் பிரச்னைகள் எழும் போது ஏற்கனவே எடுத்து பதிவு செய்து வைத்த யூடியூப் வீடியோக்களை மாணவர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறேன். இப்படி ஆன்லைனில் பாடம் நடத்தினால், நான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஷயம் எல்லோருக்கும் தெரிந்து விடும். குணமடைந்து வந்தால்கூட யாரும் அருகில் வர பயப்படுவார்கள் என பலர் என் குடும்பத்தினருடம் கூறி உள்ளனர். அதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை,’’ என்றார்.

Tags : teacher ,Corona Ward , Online, Corona Ward, Goodreader
× RELATED கொரோனா ஊரடங்கு எதிரொலி!: மாணவர்களின்...