×

மே 17க்கு பிறகு என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்: மக்களிடம் கேட்கிறார் கெஜ்ரிவால்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட 3ம் கட்ட ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிய உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மே 17ம் தேதிக்கு பிறகு என்ன செய்யலாம், ஒவ்வொரு மாநிலத்திற்கு என்னென்ன தளர்வுகள் தேவை என வரும் 15ம் தேதிக்குள் அனைத்து மாநில அரசுகளும் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், ஊரடங்குக்குப் பிறகு என்ன செய்யலாம் என பொதுமக்களே சிறந்த பரிந்துரைகளை வழங்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்காக இன்று மாலை 5 மணிக்குள் இலவச தொலைபேசி எண் 1031லிலும், 8800007722 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் மக்கள் தங்கள் கருத்துகளை அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இமெயில் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கெஜ்ரிவால்  கூறுகையில், ‘‘மக்கள் தரும் கருத்தின்படி முடிவு செய்யப்படும். ஆனாலும், மே 17க்குப் பிறகு முழுமையாக ஊரடங்கை தளர்த்தும் வாய்ப்பில்லை,’’ என்றார்.

Tags : Kejriwal , Kejriwal, PM Modi, Corona virus
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...