×

சென்னை கூடுதல் கமிஷனர், துணை கமிஷனர் உட்பட 7 பேருக்கு கொரோனா: காவல்துறையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு

சென்னை: சென்னை மாநகர கூடுதல் கமிஷனர், துணை கமிஷனர், உதவிகமிஷனர் உட்பட ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இதையடுத்து மாநகர காவல் துறையில் நோய் தொற்றின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை போலீசார் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். அப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கொரோனா தொற்று பரவி வருவது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகர காவல் துறையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக உள்ள  உயர் அதிகாரிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், தென் சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியில் உள்ள துணை கமிஷனருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆலப்பாக்கத்தில் அவரது வீட்டில் உள்ள அனைவருக்கும், அதிகாரிகள் பிசிஆர் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தியுள்ளனர். துறைமுகம் உதவி கமிஷனருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மூன்று உயர் அதிகாரிகள் பணியாற்றிய அலுவலகங்களில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தியுள்ளனர்.

இதுதவிர  அடையார் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் 4 போலீசாருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் துறையில் நேற்று வரை கூடுதல் கமிஷனர், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என 14 பேர், சப்- இன்ஸ்பெக்டர்கள் 19 பேர், தலைமை காவலர் மற்றும் காவலர்கள் என 41 பேரும், ஆயுதப்படையை சேர்ந்த 25 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 29 பேர், தீயணைப்பு வீரர்கள் 9 பேர்,  ஊர் காவல் படையை சேர்ந்த  5 பேர், புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்கள் 19 பேர் என மொத்தம் நேற்று வரை 160 பேர் நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இடம் பற்றக்குறையால் சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளில் போலீசார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ெசன்னையில் பாதுகாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு நாளுக்கு நாள் நோய் தொற்று அதி தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Madras High Commissioner ,Madras ,High Commissioner ,Coronation of Police , Madras Additional Commissioner, Deputy Commissioner, Corona, Police
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...