×

முழு பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படும்போது செலவு 3 மடங்கு அதிகரிக்கும்: போக்குவரத்து தொழிற் சங்கம் தகவல்

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் தினந்தோறும் 21,000 பேருந்துகளை இயக்குகிறது. இதில் 2.10 கோடி பயணிகள் பயணிக்கின்றனர்.  ஒரு பேருந்தில் ஒரு நேரத்தில் சட்டப்படி அனுமதிக்க வேண்டிய பயணிகள் எண்ணிக்கையை போல் 2 முதல் 3 மடங்கு வரை ஏற்றப்படுகிறது. அப்படி ஏற்றினாலும் வருவாயை விட பேருந்து இயக்க செலவு 1 கி.மீட்டருக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை அதிக செலவாகின்றது.

ஒரு பேருந்தில் 6 அடி சமூக இடைவெளியுடன் பயணம் செய்ய அனுமதித்தால் 25 பயணிகள் மட்டுமே அனுமதிக்க முடியும். அதற்குமேல் அனுமதித்தால் சமூக இடைவெளி குறைந்து நோய் தொற்று பரவும் அபாயம் உண்டு.
அரசு பேருந்துகள் இயக்க அனுமதிப்பது என்பது தமிழகத்தில் நோய் தொற்று மேலும் விரிவடைய காரணமாக இருந்துவிடக்கூடாது. நோய் தொற்றை தடுக்கும் வகையில் பேருந்துகளை இயக்க கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான ஏற்பாடுகளை செய்துகொண்டு முழுமையான பாதுகாப்புடன் இயக்க அனுமதிக்க வேண்டும்.

அவ்வாறு முழுமையான பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படும்போது, கழகங்களின் வருவாய் பன்மடங்கு மேலும் குறைந்து, பேருந்து இயக்க செலவு 3 மடங்கு அதிகரிக்கும். இந்த அதிக செலவு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும். பொருளாதார பரவலாக்கலுக்குமானது என்பதால், ஒட்டுமொத்த போக்குவரத்து கழகங்களின் செலவினத்தையும் மத்திய, மாநில அரசுகளே ஏற்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Transport Association Full ,Trip Association , Full security, buses, cost, transport union
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...