×

கொரோனா தடுப்பூசி குறித்த இரகசிய தகவல்களை திருட சீன ஹேக்கர்கள் முயற்சி செய்வதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு!!!

பெய்ஜிங் : கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் போட்டியில் தடுப்பூசி ஒன்றை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சி தகவல்களை சீன ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.  அமெரிக்காவும் சீனாவும் அனைத்திலும் போட்டி போட்டு வருவது பல காலமாக நடந்து வருகிறது. இரு நாடுகளும் வர்த்தகம் முதல் 5ஜி நெட்வொர்க்குகள் வரை போட்டி தொடர்கிறது. இதற்கிடையே உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் அமெரிக்கா கடுமையாக பாதித்துள்ளது. வைரசை வேண்டுமென்ற உலக நாடுகளுக்கு பரவ விட்டதாக சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சி தகவல்களை சீன ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு மற்றும் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் நம்புகின்றனர் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பூசியை உருவாக்க அரசாங்கங்களும், தனியார் நிறுவனங்களும் போட்டியிடுவதால், சீன ஹேக்கிங் குறித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட அமெரிக்க உளவு அமைப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளன.

கொரோனாவுக்கான சிகிச்சைகள் மற்றும் சோதனைகள் குறித்த தகவல்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை ஹேக்கர்கள் குறிவைக்கின்றனர். ஆனால் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும், கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சியில் நாங்கள் உலகை வழிநடத்துகிறோம். எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் வதந்திகள் மற்றும் அவதூறுகளால் சீனாவை குறிவைப்பது ஒழுக்கக்கேடானது, எனவும் கூறினார்.

Tags : US ,Chinese ,hackers , Corona, Vaccine, Confidential Information, Steal, Chinese Hackers, Try, America, Public, Charge
× RELATED டிக்டாக் செயலிக்கு 9 மாதங்கள் கெடு விதித்த அமெரிக்க நாடாளுமன்றம்!!