×

பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாடத்துக்கு உதவி செய்ய விரும்புகிறேன் : மீண்டும் ஆசிரியராக மாறிய கனடா பிரதமர்

கனடா : கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு நிலவும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.கொரோனா பரவலை தடுக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது கடினமானதாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் பெற்றோர்களே. ஒருவேளை நீங்கள் உங்கள் குழந்தைகளின் வீட்டுப் பாடக் கேள்விகளால் சிக்கிக் கொண்டீர்களா?நானும் ஒரு ஆசிரியர்தான். நான் உதவ விரும்புகிறேன். #CanadaHomeworkHelp பயன்படுத்தி தெரியப்படுத்துங்கள். என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அவர் பல்வேறு பணிகளை செய்துள்ளார். அதில் முக்கியமானது ஆசிரியர் பணி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : school students ,Canada ,teacher , School, Students, Homework, Help, Teacher, Canada, PM
× RELATED அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8...