×

தரமற்ற மருத்துவப் பொருட்களை அனுப்பிய சீனாவிற்கு நிச்சயமாக பணம் கொடுக்க முடியாது : கனடா பிரதமர் அதிரடி அறிவிப்பு

கனடா : தரமற்ற மருத்துவப் பொருட்களை சீனா அனுப்பியதாக பல நாடுகள் குற்றஞ்சாட்டியநிலையில், தற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒருபடி மேலேபோய் பணம் தரமாட்டேன் என அறிவித்துள்ளார்.
உலகையே புரட்டி போட்டு வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளுக்கு, மருத்துவ உபகரணங்களை சீனா வழங்கி வருகிறது. ஆனால் சீனா அனுப்பிய மருத்துவ உபகரணங்கள் பல தரமற்றதாக இருப்பதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வந்தது.

இந்நிலையில், சுமார் 1.1 கோடி N95 மாஸ்க்குகளை, சீனாவில் இருந்து கனடா வாங்கியுள்ளது. இதில் 10 லட்சம் மாஸ்க்குகள் மட்டுமே உரிய தரத்தில் இருப்பதாகவும், மேலும் 16 லட்சம் மாஸ்க்குகள் ஆய்வில் இருப்பதாகவும் கனடா கூறியுள்ளது. இது தவிர மீதமுள்ள சுமார் 80 லட்சம் மாஸ்க்குகள் தரமில்லாமல் இருப்பதாக கனடா குற்றஞ்சாட்டியுள்ளது.

சீனாவின் தரமற்ற உபகரணங்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீனாவிடம் இருந்து பெறப்பட்ட முகக்கவசங்கள் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்த தரம் உள்ளதாக இல்லாததால் அந்த முகக்கவசங்களுக்கு கனடா நிச்சயமாக பணம் செலுத்தாது என கூறினார்.

இது முதல் முறையல்ல, கடந்த மாதமும் இதேபோல் சீனா தரமற்ற 10 லட்சம் மாஸ்க்குகளை அனுப்பிய நிலையில் மீண்டும் தரமற்ற மாஸ்க்குகளை வழங்கியது கனடா பிரதமருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவை சீனாவுக்கு ஏற்கனவே தரமற்று இருந்த மருத்துவ உபகரணங்களை திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : China ,Canada , Non-standard, Medical Products, China, Money, Canada, Prime, Action, Notification
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...