×

ஒரு ஆணுக்கு 2 மனைவிகள்.. விநோதமான கலாச்சார முறையை பின்பற்றும் கிராமம்; ஏன் தெரியுமா ?

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் இரு மனைவிகளை திருமணம் செய்வதை கலாச்சாரமாகவே கொண்டு வாழ்ந்து வரும் கிராம மக்களின் வாழ்க்கை முறையை கண்டு பலர் வாயடைத்து போய் உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பார்பர் மாவட்டம் இந்தியா-பாக் எல்லையில் அமைத்துள்ளது. இந்த பகுதியில் தேரசர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்கள் அந்த பகுதியில்தான் வசித்து வருகின்றனர். அவர்களுக்குள் ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்கிறது. அதை அந்த கிராம மக்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர்.

அந்த கிராமத்தில் உள்ள திருமணமான அத்தனை ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் இருக்கிறார்களாம். இது ஒன்று அவர்கள் பின்பற்றும் மத சடங்கு இல்லை. இந்த பகுதியில் வாழும் மக்களின் கலாச்சாரம். இது மதங்களை கடந்து அனைவரிடமும் இருக்கிறது. அப்பகுதியில் முஸ்லீம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களும் இதே பழக்கத்தை தான் பின் பற்றுகின்றனர்.அந்த ஊரில் வாழும் ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் முதல் மனைவியை திருமணம் செய்த பிறகு கட்டாயம் இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்ய வேண்டுமாம். ஏன் என்றால் முதல் மனைவியிடமிருந்து குழந்தையே பிறக்காது என கூறப்படுகிறது.

அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அனைவரும்  இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவர் மூலமே குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர். பலர் தனது முதல் மனைவியின் மூலம் குழந்தை பெற்றுக்கொள் முயற்சித்தும் முடியவில்லை என கூறப்படுகிறது. இதில் மற்ற இடங்களை விட அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் முதல் மனைவியும் இரண்டாவது மனைவியும் தங்களுக்குள் எந்தவித பொறாமை அல்லது பாதுகாப்பற்ற தன்மையால் சண்டையிடாமல் உள்ளனராம்.

Tags : wives ,village , Men, Wives, Culture, Village, Rajasthan
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...