×

5 காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால் மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் மூடல் : 28 நாட்களுக்கு ரயில் சேவை செயல்படாது என தகவல்

சென்னை : பாதுகாப்பு பணியில் இருந்த 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால்  சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள அறையில் தங்கி சுமார் 40 ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறையில் தங்கியிருந்த 29 வயதான ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் உடன் இருந்த 39 காவலர்களையும் அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த பரிசோதனையின் முடிவில் நேற்று 4 ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனால் இவர்களை தனிமைப்படுத்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் மூடப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரயில் நிலையம் ஒன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் காரணமாக, சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதார துறை விதிகளின்படி 28 நாட்களுக்கு அந்த பகுதி வழியே ரயில் சேவை ரத்து செய்யப்படும் எனவும், ஊரடங்கு தளர்வுக்கு பின்பு ரயில் சேவை தொடங்கப்பட்டாலும், கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலான பகுதிகளில் ரயில் சேவை செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : station ,Mantralayam ,police officers ,guards ,beach ,closure , 5 guards, corona, herd, flying train, station, closure, Beach, Velachery, Rail, Service
× RELATED அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்