×

ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா? கட்டுப்பாடுகளை தளர்த்துவதா?; நாட்டு மக்களுடன் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் 21 நாட்கள், பின்னர் 19 நாட்கள், அடுத்தது 14 நாட்கள் என 3 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 3ம் கட்ட ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிய உள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கு முடிவதற்கு முன்பாக, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டறிகிறார்.

அந்தவகையில், 3ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், மே 17ம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் என்னென்ன தளர்வுகளை செய்யலாம் என்பது குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது குறித்தும் காணொலி காட்சி மூலம் பிரதமர் கருத்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார்.

ஊடங்கு காலத்தில் பிரதமர் மோடி ஒவ்வொரு முறை நாட்டு மக்களுடன் உரையாற்றும் போதும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பதுடன், மக்களை ஒற்றுமையாக இருக்க எதேனும், செய்ய வேண்டுகோள் விடுப்பார். இந்நிலையில், 3-வது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றவுள்ளார். எனவே, இன்று பிரதமர் மோடி என்ன பேசுவார்? என்ன செய்ய சொல்லி வேண்டுகோள் விடுப்பார் என்று நாட்டு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையே, சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மே 31ம் தேதிவரை தமிழகத்துக்கு விமான சேவையும், ரயில் சேவையும் வேண்டாம் என்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். இதனால், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Tags : speech ,Modi , Will the curfew be extended further? Loosen restrictions ?; PM Modi's speech at 8 pm tonight
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு...