×

இந்தியாவில் முதல்முறையாக கொரோனா நோயாளிகளுக்கு ஃபேவிபிராவிர் மருந்து கொடுத்து டிரையல் செய்வதில் 3ம் கட்ட ஆய்வு தொடக்கம்

மும்பை : கொரோனா நோயாளிகளுக்கு ஃபேவிபிராவிர் (Favipiravir) என்ற மருந்தை கொடுத்து, மருத்துவ பரிசோதனைகளின் மூன்றாம் கட்ட ஆய்வை கிளென்மார்க் நிறுவனம் தொடங்கியுள்ளது.

*ஜப்பான் மற்றும் சீனாவில் இன்ஃப்ளூயன்ஸா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஃபேவிபிராவிர் மருந்தை பயன்படுத்தி கொரோனாவிற்கு எதிரான மருத்துவ சோதனைகளை கிளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

*கடந்த மாதம், கிளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம்,  கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஃபாவிபிராவிர் வைரஸ் தடுப்பு மாத்திரைகளின் மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஃபேவிபிராவிர் மருந்து

அவிகன் என்ற வணிகப்பெயரில் விற்கப்படும் ஃபாவிபிராவிர், ஜப்பான் மற்றும் சீனாவில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸினால் உண்டாகும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தாவரத்தின் சாறில் இருந்து பெறப்படும் ஒரு வைரஸ் தடுப்பு மருந்து ஆகும். தற்போது பல்வேறு வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

ஃபாவிபிராவிர் மருந்து COVID-19 நோயாளிகளுக்கு பயனளிக்குமா?

தற்போது ஃபேவிபிராவிர் மருந்தை மனிதர்களிடம் டிரையல் செய்வதில் கிளென்மார்க் நிறுவனம் 3ம் கட்ட ஆய்வில் உள்ளது. இன்னும் ஒன்றரை மாதங்களில் பரிசோதனை முடிந்து விடும். மனிதர்களிடம் எதிர்பார்த்த நல்ல பலன் கிடைத்து விட்டால், மலிவான விலையில் மார்க்கெட்டில் கிடைக்கும்.

Tags : Commencement ,Phase 3 ,trial ,coronavirus patients ,India ,coronavirus drug trial , India, First, Corona, Patients, Favipravir, Drug, Trial, Phase 3, Study Start
× RELATED வாக்குச்சாவடி வாரியாக 3ம் கட்ட பணி...