×

ஊரடங்கு உத்தரவால் பரிதாபம் மனிதர்களுக்கு மட்டுமா பசி? மந்திகளும் உணவுக்கு தவிப்பு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே, கொடைக்கானல் செல்லும் சாலையில் சுற்றுலாப்பயணிகள் கொடுத்த உணவுகளை சாப்பிட்டு பசியாறி வந்த குரங்கு கூட்டம், கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றன. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டம்டம் பாறை வரை உள்ள கொடைக்கானல் சாலையின் இருபுறமும் குரங்குகளின் நடமாட்டம் அதிகளவு இருக்கும். இம்மலைச்சாலையில் சுற்றித் திரியும் குரங்குகள், கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் வீசும் உணவுகளை சாப்பிட்டு சுற்றித் திரிந்தன. இதனால் இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குரங்குகள் குட்டிகளுடன் திரிந்தன.

கொரோனா பரவலை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 25 முதல் கொடைக்கானல் செல்லும் சாலை மூடப்பட்டது. தடையால் சுற்றுலாப்பயணிகள் வராததால், கடந்த 48 நாட்களாக மலைச்சாலையில் வாகனப் போக்குவரத்து இல்லை. இதனால் மலைச்சாலையில் சுற்றித்திரிந்த குரங்குகள் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காத நிலையில் பரிதவித்து வந்தன. உணவை தேடி பெரும்பாலான குரங்குகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘சாலையோரங்களில் சுற்றுலாப்பயணிகள் வீசும் உணவுப்பொட்டலங்கள் கிடைக்காததால், பசியில் திண்டாடிய குரங்குகள் மீண்டும் வனப்பகுதிக்குள், இயற்கை உணவை தேடிச் சென்றுவிட்டன. கொரோனா ஊரடங்கால் குரங்குகள் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்பியுள்ளன’’ என்றார்.

Tags : Curfew , humans, herd , also starving , food
× RELATED ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட...