×

பசி தாங்காமல் கூட்டமாக குப்பைக்கிடங்குகளில் தஞ்சம் புகுந்த விலங்குகள், பறவைகள்!.. கோழிக்கழிவில் விஷம் வைத்துக் கொன்ற கொடூரம்...!

லகிரி : உணவின்றி தவித்த விலங்குகள் குப்பை கிடங்குகளில் தஞ்சம் புகுந்த காரணத்தால் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அனைத்து மக்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஒட்டுப்பட்டரை பகுதியில் குன்னூர் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இப்பகுதியை சுற்றி வசம் பள்ளம், வாசுகி நகர், வள்ளுவர் நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள நாய், பூனை, பன்றி போன்றவை குப்பை கிடங்கில் கிடைக்கும் உணவுப் பொருட்களை தினமும் உண்டு வருகின்றன.

இந்நிலையில் வள்ளுவர் நகரில் கடந்த 6ம் தேதி நாய்கள், காகங்கள், பூனை ஆகியவை திடீரென கீழே விழுந்து உயிரிழந்தன. இதையடுத்து அங்கு சென்ற மண்டல கால்நடை துறை இணை இயக்குநர் டாக்டர் வேடியப்பன் தலைமையில் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் வந்த சேர்ந்த பிறகும் கூட ஒரு சில விலங்குகள் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அவைகளுக்கு தண்ணீர் மற்றும் முதலுதவிகளைச் செய்தும் எந்த பயனும் இல்லாமல் ஒவ்வென்றாக அனைவரின் கண்முன்னே 6 நாய், 4 காகம், ஒரு பூனை, காட்டுப்பன்றி உள்ளிட்டவை இறந்தன.இதையடுத்து விலங்குகளுக்கு பிரேத பரிசோதனை செய்து, மாதிரிகளை எடுத்தனர்.

இதனிடையே  ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும்  சாலையோர விலங்குகள் நாய், பூனை போன்றவையும் காகமும் குப்பை கிடங்குகளில் உணவிற்காக தஞ்சம் பபுகுந்துள்ளது. ஆனால் இதை பிடிக்காத அரக்க குணம் படைத்த யாரோ சிலர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் கோழிக் கழிவில் விஷம் வைத்துக் கொன்றுள்ளனர். அவர்கள் யாரென கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

Tags : litter shelters , Hunger, litter, asylum, animals, birds, poultry, poison, cruelty
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...